தமிழகத்தையே உலுக்கிய சம்பவம் .. கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு..!!
Villupuram fake liquor death rises to 12
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வம்பா மேடு பகுதியில் எக்கியா குப்பம் மீனவர்கள் நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். அப்போது மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் சுமார் 60க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
நேற்று வரை சிகிச்சை பெற்று வந்த 6 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 9ஆக நீடித்தது. இந்த நிலையில் இன்று காலை முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயன், சங்கர் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 48 வயதான ஆபிரகாம் என்பவர் தற்பொழுது உயிரிழந்துள்ளார். இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
English Summary
Villupuram fake liquor death rises to 12