35 ஆண்டுகளாக சிறையில் இருந்த வீரப்பனின் சகோதரர் மாதையன் உயிரிழப்பு.!! - Seithipunal
Seithipunal


சந்தன மரக்கடத்தலில் ஈடுபட்டு, தமிழக எல்லையில் கர்நாடகத்தின் மாநில எல்லை ஆக்கிரமிப்பை கடுமையாக எதிர்த்தவர் வீரப்பன். இவரது சொந்த அண்ணன் மாதையன் (வயது 87). இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி வன அதிகாரியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.

ஆயுள் கைதியான மாதையன் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 35 ஆண்டுகளாக சிறையில் இருந்து வந்தார். இவரை விடுதலை செய்ய வேண்டும் என பல அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தது.  தற்போது, அவருக்கு 75 வயதாகும் நிலையில், வயது முதிர்வு காரணமாக அடிக்கடி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார்.

இந்நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள மாதையன் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பரோலில் சென்று திரும்பினார். மீண்டும் மாதையனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, அவர் சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து நிலையில் இன்று உயிரிழந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

virappan brother passed away


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->