5 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை! முன்னாள் திமுக கவுன்சிலர் பக்கிரிசாமி மீது குண்டாஸ்! - Seithipunal
Seithipunal


5 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் திமுக கவுன்சிலர் பக்கிரிசாமி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் சக்தி நகரில் இயங்கிவரும், வைத்தியலிங்கம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயின்ற 5 வயது சிறுமி பாலியல் தொந்தரவு காரணமாக, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

சிறுமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பள்ளி தாளாளரும், விருத்தாச்சலம் திமுக 30 வது வார்டு கவுன்சிலருமான பக்கிரிசாமி சிறுமிக்கு மிட்டாய் கொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

சுமார் 12 மணி நேரம் கழித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பக்கிரிசாமியை கைது செய்தனர். மறுபக்கம் பக்கிரிசாமியை கட்சியிலிருந்து நீக்கி திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில், தமிழகத்தையே அதிரவைத்த கொடூர மிருகம் பக்கிரிசாமி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

கடலூர் மத்திய சிறையில் இருக்கும் பக்கிரிசாமியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் உத்தரவு பிறப்பித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virudhachalam Ex DMK Pakkirisami arrested gundos


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->