விருத்தாசலம் அருகே துப்பாக்கியுடன் வேட்டையாடிய இளைஞர்! - Seithipunal
Seithipunal


விருத்தாசலம் அருகே​ உரிமம் இல்லாத துப்பாக்கி மூலம் விலங்குகளை வேட்டையாடிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்:

கடலூர் மாவட்டம்: விருத்தாசலம் அருகே உள்ள மங்கலம் பேட்டை பகுதியில் வயல்வெளியில் வனவிலங்குகளை நாட்டு துப்பாக்கி மூலம் வேட்டையாடப்படுவதாக விருத்தாசலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதனை தொடர்ந்து விருத்தாசலம் தலைமை காவலர் முருகேசன் தலைமையிலான போலீசார் தனிபடை அமைத்து மங்கலம்பேட்டை எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் சோதனை நடத்தினர். 

அப்பகுதிக்கு அருகே இருந்த முந்திரி தோப்பில் உரிமம் இன்றி நாட்டு துப்பாக்கி வைத்து வனவிலங்குகளை வேட்டையாடுவதாக தெரியவந்தது. 

அதன் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளும் போது, அதே பகுதியை சேர்ந்த தங்கராசு மகன் தேவக்குமாரை (வயது 37) பிடித்து அவரிடமிருந்த நாட்டு துபாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். 

பின்னர் அவரை மங்கலம் பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

virudhachalam near animals Hunted youth


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->