எம்ஜிஆர் நினைவிடத்தில் வி.கே சசிகலா மலர்தூவி மரியாதை..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனமான எம்ஜிஆரின் 35 வது நினைவு தினம் இன்று தமிழக முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் வி.கே சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து எம்ஜிஆர் நினைவிடத்தில் வி.கே சசிகலா தரப்பினர் உறுதிமொழி ஏற்றனர். அப்பொழுது அதிமுகவுக்கு சசிகலாவை தலைமை தாங்க வைக்கவும் திமுகவை வென்று அதிமுகவை தமிழகத்தில் ஆட்சி அமைக்க மக்கள் பணி செய்திட உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். 

பிறகு செய்தியாளர்களை சந்தித்த வி.கே சசிகலா "அதிமுகவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என யாராலும் சொல்ல முடியாது. அதிமுக யாருக்கு சொந்தம் என தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அதிமுகவில் தொண்டர்களின் முடிவு அடிப்படையிலேயே எல்லாம் நடக்கும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் பொங்கலுக்கு விவசாயிகளிடம் இருந்து கரும்பு கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் தற்போதைய திமுக ஆட்சி அவ்வாறு செய்யவில்லை" என பேசி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VK Sasikala flower sprinkling respect to MGR memorial


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->