மதுரை :  ரயில் நிலையத்தில் திருமண போட்டோஷூட் நடத்த அனுமதி.! - Seithipunal
Seithipunal


மதுரை ரயில் நிலையத்தில் திருமண போட்டோஷூட் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் திருமணங்களில் போட்டோ ஷூட் மற்றும் டிஜே பார்ட்டி என பல வித்தியாசமான நிகழ்வுகள் நடைபெறுகிறது. அதிலும் குறிப்பாக திருமண போட்டோ ஷூட் என்ற பெயரில் வித்தியாச வித்தியாசமாக போட்டோ சூட் நடத்துவது வழக்கமாகியுள்ளது.

இதில் சில போட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகும். அதேபோல், சில புகைப்படங்கள் கடுமையான விமர்சனங்களையும் பெறுகிறது.

இந்த நிலையில் மதுரை ரயில் நிலையத்தில் திருமண ஜோடிகள் போட்டோ ஷூட் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை மதுரை ரயில் நிலைய மேலாளர் வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில் மதுரை ரயில் நிலையத்தில் போட்டோ சூட் நடத்த கட்டணமாக ரூ.5000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள கூடுதலாக ரூ.1500 செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Wedding photoshoot allowed in madurai Railway station


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->