இந்தியாவிலேயே முதல் முறை... மெரினாவில் வாரந்தோறும் இசை நிகழ்ச்சி!
weekly Concert Marina organized Chennai police
சென்னை, மெரினாவில் வாரம் தோறும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இசை நிகழ்ச்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருப்பதாவது,
மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்களை உற்சாகப்படுத்தும் வகையில் சென்னை காவல் துறையின் இசைக்குழுவினர் இனி வாரம் தோறும் சனிக்கிழமை அன்று இசை நிகழ்ச்சி நடத்த உள்ளனர்.
இதற்கான நிகழ்ச்சியை தற்போது தொடங்கி வைத்தோம். இசையை கேட்டு ரசித்தோம். இந்தியாவிலேயே முதல் முறையாக காவல் துறை சார்பில் பொதுவெளியில் இசை நிகழ்ச்சி நடத்தும் சென்னை பெருநகர் காவல் துறையின் இந்த முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
English Summary
weekly Concert Marina organized Chennai police