விசிக பிரமுகர் விடுதியில் காதல் ஜோடியின் பிணம் கிடந்த வழக்கில் திடீர் திருப்பம்.! - Seithipunal
Seithipunal


சென்னை திருவல்லிக்கேணியில் தனியார் விடுதி ஒன்றில் தங்கி இருந்த மேற்கு வங்க காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணியில் விசிக மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரான செல்லதுரை என்பவருக்கு சொந்தமான 'தி ஒயிட் ஹவுஸ்' என்ற தனியார் விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இதில், கடந்த ஆகஸ்ட் மூன்றாம் தேதி மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரசிஞ்சித் கோஷ் மற்றும் ஆர்பிதா பால் என்ற காதல் ஜோடி கணவன் மனைவி என்று கூறி அறை எடுத்து தங்கியுள்ளனர்.

மூன்று நாட்களுக்குப் பின் அந்த விடுதியின் அறை கதவு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் அறையில் பார்க்கச் சென்றபோது துர் நாற்றம் வீசியது. இதில் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்த நிலையில், அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றபோது அழுகிய நிலையில் இளம்பெண்ணின் பிணமும், அழுகாத நிலையில் ஆணின் பிணமும் இருந்தது.

இதனை மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்ததில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் இருவருமே டி.நகர் ஜி.ஆர்.டி ஓட்டலில் பணியாற்றி வந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. 

இருவரும் காதலித்து வந்த நிலையில் இந்த காதலுக்கு சம்மதம் வாங்க இளைஞர் பிரசின்ஜித் கோஷ் மேற்கு வங்கத்தில் இருக்கும் பெற்றோரை சந்திக்க சென்றுள்ளார். அப்பொழுது அந்த இளம் பெண்ணுக்கு ஜிஆர்டி ஹோட்டலில் பணி புரியும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நிதீஷ் குமார்(22) மற்றும் திருவண்ணாமலையைச் சேர்ந்த ராஜா(32) என்ற இரு இளைஞர்கள் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

மேலும் அந்த பெண் காதலிக்கும் பிரசஞ்சித்தை திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று கூறி மிரட்டி வந்துள்ளனர்  இதனால் அந்த பெண் மன உளைச்சலில் இருந்த நிலையில், சமீபத்தில் தனது காதலன் பிரசஞ்சித் மேற்கு வங்கத்திலிருந்து வந்த நிலையில், ரயில் நிலையத்திற்கு சென்று அவரை அழைத்துக்கொண்டு ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

 அதன் பின்னர் அவர்கள் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டனர். அந்த கடிதத்தில், "எங்களை திருமணம் செய்து கொள்ள விடாமல் தடுத்துவர்கள் அனைவரும், இனி சந்தோஷமாக இருங்கள். நாங்கள் சொர்க்கத்தில் வாழ்ந்து கொள்கிறோம்." என்று தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

West Bengal Couples Body Found In Triplicane vck Poitician hotelHotel


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->