சென்னைக்கு அடுத்த மழை எப்போது..? தனியார் வானிலை ஆய்வாளர் ரிப்போர்ட்..!
When is the next rain for Chennai
சென்னைக்கு கடைசி சுற்று மழை எப்போது என்பது குறித்த தகவலை தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் டிசம்பர் 30, 31 ஆகிய தேதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அவர் கூறியுள்ளார். காற்றழுத்த தாழ்வின் காரணமாக பெய்யும் மழையில், சென்னைக்கு கடைசி மழை இதுதான் என்றும், இந்த மழைக்கு பின்னர் சென்னைக்கு மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சென்னையை சுற்றியுள்ள பூண்டி போன்ற ஏரிகள் நிரம்பி உள்ளது. எனவே இந்த ஆண்டு தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் கூறியுள்ளார்.
அத்துடன், காற்றழுத்த தாழ்வு கடந்து சென்று மீண்டும் திரும்பி வந்துள்ளதால், கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் நல்ல மழை பெய்தது என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக டிசம்பர் 30, 31 ஆகிய தேதிகளில் மழை பெய்யும். இதுதான் இந்த ஆண்டின் இறுதி மழை என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேபோல், தூத்துக்குடி, ராமநாதபுரம், வேலூர், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, தென்காசி, திருவண்ணாமலை, நாமக்கல், சேலம், ஈரோடு, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, நீலகிரி ஆகிய பகுதிகளில் இன்று மழை பெய்யும் என்றும், குறித்த மாவட்டங்களுக்கும் இதுதான் கடைசி மழையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
When is the next rain for Chennai