உண்மையான பெரியார் யார்? சீமான் பரபரப்பு பேச்சு!
Who is the real Periyar? Seeman's Sensational Talk
தமிழகத்தில் குற்ற பரம்பரை சட்டத்துக்கு எதிராக பெரியார் குரல் கொடுக்கவே இல்லை என்றும் அந்த சட்டத்துக்கு எதிராக போராடியவர் முத்துராமலிங்க தேவர் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சீதாலட்சுமிக்கு ஆதரவு திரட்டி நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு,பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-கேரள மாநிலம் வைக்கம் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நடந்த அநீதிக்கான போராட்டத்தில் பெரியார் பங்கேற்றார் என்றும் இதற்காக அவரை வைக்கம் பெரியார் என்று அழைக்கின்றனர் என கூறினார். மேலும் காங்கிரஸ் கட்சி தலைமை கேட்டுக்கொண்டதால் அவர் அந்த போராட்டத்தில் பங்கேற்றார் என்றும் அதேசமயம் தமிழகத்தில் குற்ற பரம்பரை சட்டத்துக்கு எதிராக அவர் குரல் கொடுக்கவே இல்லை என்றும் அந்த சட்டத்துக்கு எதிராக போராடியவர் முத்துராமலிங்க தேவர் என கூறிய சீமான் அவருக்கு சாதி குறியீடு செய்தது யார்? கேள்வி எழுப்பினர். மேலும், இந்த சட்டத்தை தகர்த்து எறிந்தவர் அம்பேத்கர் என்றும் எனவே இவர்கள் 2 பேரும்தான் உண்மையான பெரியார் என சீமான் கூறினார்.


தொடர்ந்து பேசிய சீமான் ,பழனிபாபாவை பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது என்றும் அவரை தெரியாதவருடைய வாக்கு வாங்கி எதுவும் செய்ய போவதில்லை என்றும் மதசார்பற்றவராக செயல்பட்டவர் அவர் என்றும் கைரேகை சட்டத்துக்கு எதிராக போராடிய இடத்தில், தனது சொந்த 5 ஏக்கர் நிலத்தை விற்று அந்த பணத்தை கொடுத்து கல்லூரியை உருவாக்கியவர் என்றும் பெரியார் அனைவரையும் படிக்க வைத்தார் என்று முட்டாள்கள் தான் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் என கூறினார் .
மேலும் கூலி உயர்வு கேட்ட 42 பேரை கொன்ற கோபால்சாமி நாயுடுவுக்கு சாதகமாக பெரியார் பேசினார் என்றும் அப்போதைய முதல்-அமைச்சராக இருந்த அண்ணாவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் மீது புகார் தெரிவித்து பிரச்சினையை திசை திருப்பிவிட்டார் என கூறிய சீமான் அதேசமயம் இமானுவேல் சேகரன் கொலைக்கும், முத்துராமலிங்கதேவருக்கும் சம்பந்தமில்லை. ஆனால் முத்துராமலிங்க தேவரை கைது செய்ய வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்தவர் பெரியார் கூறினார். இதில் இருந்தே பெரியாரின் குணங்களை தெரிந்து கொள்ள முடியும்.இவ்வாறு சீமான் அவர் கூறினார்.
English Summary
Who is the real Periyar? Seeman's Sensational Talk