கணவனை கொலை செய்த மனைவி.. காவல்துறை விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!
Wife Kills His Husband Near mayiladuthurai
கணவனை அடித்து கொலை தீவைத்து கொளுத்திய மனைவி மற்றும் மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், கீழமூவர்கரை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல்(45). இவருக்கு திருமணமாகி வசந்தா என்ற மனைவியும் இரண்டு மகன்ளும் ஒரு மகளும் உள்ளனர். சக்திவேல் தனது மனைவி மீது சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், சக்திவேல் மர்மமான முறையில் தீக்காயங்களுடன் எரிந்த நிலையில் வீட்டின் அறையில் இறந்து கிடந்துள்ளார். வசந்தா கணவன் தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார். இதனை நம்பிய ஊர்மக்கள் அவரின் உடலை தகனம் செய்ய முடிவு செய்தனர்.
இதுப்பற்றி தகவலறிந்து வந்த கிராமநிர்வாக அலுவலர் அவரது சந்தேகம் இருப்பதாகக்கூறி, காவல்துறையினடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது வசந்தாவும் அவரது மகனும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.
அப்போது, அவர் அளித்த வாக்குமூலத்தில் சக்திவேல் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டையிட்டு வந்ததாகவும் இதனால் ஆத்திரம் அடைந்த வசந்தா சுத்தியலால் தலையில் அடித்து கொலைசெய்து கொலை செய்துவிட்டு அதனை மறைப்பதகாக மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து அறையின் கதவை மூடியட்தும் தெரியவந்தது.
இதனை அறிந்த அவரது மகன் மறைத்ததும் தெரியவந்தது. இந்த வாக்குமூலத்தை அடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Wife Kills His Husband Near mayiladuthurai