தளபதி விஜய்! அடைமொழி பட்டத்தோடு பெயரையும் தூக்கிய தமிழக அரசு!
without thalapathy vijay in TNGovt order leo special show
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ வருகின்ற 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
ஆடியோ லான்ச் ரத்து செய்யப்பட்டு சோகத்தில் இருந்த விஜய் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக, லியோ திரைப்படத்திற்கான சிறப்புக் காட்சிகளை திரையிட அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்து இருந்தது.
இந்த அரசாணைப்படி, 19 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை தினசரி 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த அரசாணையில் "தளபதி" விஜய் என்று அடைமொழியோடு பதிவு செய்யப்பட்டு இருப்பது ஒரு பக்கம் சர்ச்சையை கிளப்பி இருந்தது.
இந்நிலையில், லியோ படத்தின் சிறப்பு காட்சி காலை 9 மணிக்கும், கடைசி காட்சி நள்ளிரவு 1.30 மணிக்கு முடித்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் தமிழக அரசு மீண்டும் ஒரு அரசாணையை பிறப்பித்துள்ளது.
மேலும், தமிழக அரசின் இந்த அரசாணையில் தளபதி விஜய் பெயர் நீக்கப்பட்டு, படத்தின் பெயர் மட்டும் இடம்பெற்றுள்ளது.
English Summary
without thalapathy vijay in TNGovt order leo special show