கூட்ட நெரிசலில் கைவரிசை காட்டிய பெண்! கையும் களவுமாக பிடித்த போலீசார்! - Seithipunal
Seithipunal


தென்காசி, கடையநல்லூர் அருகே உள்ள திரிகோணபுரத்தை சேர்ந்தவர் இசக்கி முத்து. இவரது மனைவி சண்முகத்தாய் (வயது 58) 

இவர் அச்சம்புதூரில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக கடந்த 3ஆம் தேதி கடையநல்லூர் அரசு மருத்துவ பேருந்து நிறுத்தத்திற்கு சென்றார். 

அப்போது இவரது கழுத்தில் இருந்த 48கிராம் எடை கொண்ட தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றதால் அதிர்ச்சி அடைந்த இவர் கடையநல்லூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். 

இதேபோன்று கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம் பெரிய வீதியை சேர்ந்த ஜோதி பாலா என்பவர் அவரது குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது அவரது கழுத்தில் இருந்த 24 கிராம் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். 

கடையநல்லூர் பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழா காரணமாக பேருந்து நிலைய கூட்ட நெரிசலில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தொடர்ந்து புகார் வந்தது. 

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் தலைமையில் தனி படையை அமைக்கப்பட்டு பேருந்து நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது அதில் 2 பெண்கள் சிறுமியின் கழுத்தில் இருந்த தங்கச் செயினை பறித்துச் செல்லும் காட்சி இடம் பெற்றிருந்தன. 

இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் தூத்துக்குடி மந்திதோப்பு பகுதியில் சேர்ந்த திருப்பதி, மனைவி அய்யம்மாள் (வயது 35) என்பது தெரிய வந்தது. 

மேலும் விசாரணையில் அய்யம்மாள் திருவிழாக்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பல்வேறு இடங்களில் புர்கா அணிந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. 

இதனை அடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்தால் 5 லட்சம் மதிப்பிலான நகைகளை பறிமுதல் செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

woman arrested taking advantage crowd robbed


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->