"திமுக கவுன்சிலரின் கணவர் கொலை மிரட்டல் விடுக்கிறார் "- ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


திமுக கவுன்சிலரின் கணவர் கொலை மிரட்டல் விடுத்தார் பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் பேபி சசிகலா இவர் முன்னாள் ஊர்க்காவல் படை வீரர் ஆவார் ‌.

நகராட்சி தேர்தலின்போது திமுகவிற்கு ஆதரவாக ஓட்டு கேட்டு வராததால் 13வது வார்டு திமுக கவுன்சிலர் பகர்த்துனிஷாவின் கணவர் நாசர் பாஷா என்பவர் தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பேபி சசிகலா நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு படையினர் உடனடியாக அவரை மீட்டு விசாரணை மேற்கொண்டனர் .

அப்போது திமுக கவுன்சிலரின் கணவர் தன்னை மிரட்டுவதாகவும் அதனால் தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்தார்.  இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman attempts suicide in front of Collector Office


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->