குற்றாலம் : பூங்காவில் பெண்ணின் சடலம் கிடந்ததால் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


குற்றாலம் : பூங்காவில் பெண்ணின் சடலம் கிடந்ததால் பரபரப்பு.!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் பேரூராட்சி அலுவலகத்திற்கு எதிரே விஸ்வநாதராவ் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் இன்று காலை சுமார் 50 வயதுடைய பெண் ஒருவர் நீண்ட நேரமாக படுத்துக் கிடந்துள்ளார். இதைப்பார்த்த பொதுமக்கள் அந்த பெண்ணின் அருகில் சென்ற போது துர்நாற்றம் வீசியது. 

இதனால், அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்த தகவல் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து  பார்த்தபோது அந்த பெண் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.

அந்த பெண்ணின் உடலில் இருந்து விஷம் குடித்ததற்கான துர்நாற்றம் வீசியது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அதன் பின்னர் போலீஸார் வழக்கு பதிவு செய்து உயிரிழந்த பெண் யார்?, அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்?, எதற்காக குற்றாலம் வந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உயிரிழந்த பெண் குறித்து தகவல் தெரிந்தவர்கள் குற்றாலம் காவல் நிலையத்திற்கு 04633 283137 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று போலீஸார் அறிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman body rescue in kutralam park


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->