திடீரென மயங்கி விழுந்த பெண் - பாஸ்ட்புட் சாப்பிட்டதால் உயிரிழந்த சோகம்.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் உள்ள ராம்ஜி நகர் அந்தோணியார் தெருவை சேர்ந்தவர்கள் அருண்-புனித பியூலா. காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதியினருக்கு ஏழு மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. 

இந்த நிலையில், பியூலாவுக்கு கணவர் அருண் கடந்த 6 மாதங்களாக தினமும் இரவில் நுாடுல்ஸ், பிரைடு ரைஸ் போன்ற பாஸ்ட் புட் உணவுகளை வாங்கி கொடுத்துள்ளார். ஆனால், சமீப நாட்களாக பியூலாவுக்கு, அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டது. 

அதன் படி பியூலா கடந்த சனிக்கிழமை திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பியூலாவை மீட்டு திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

அங்கு அவரை பரிசோதனை செய்ததில் பியூலா கோமா நிலைக்கு சென்றதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், பியூலா தொடர்ந்து பாஸ்ட் புட் உணவு சாப்பிட்டதால், கல்லீரல் முழுவதும் பாதித்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

இருப்பினும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தும், பியூலா சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார். பாஸ்ட் புட் சாப்பிட்டு இளம்பெண் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman died for eat fast food in trichy


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->