தனியாக இருந்த பெண்ணை நோட்டமிட்டு பாலியல் வன்கொடுமை! போலீசாரின் அலட்சியம் - போராட்டத்தில் மக்கள்! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பில்லா குப்பம் பகுதியை சேர்ந்த பெண் (வயது 55) கணவர் மற்றும் மகன்களுடன் வசித்து வருகிறார். 

இந்த பெண் தனக்கு சொந்தமான ஆடுகளை அதே பகுதியில் நேற்று மாலை மேய்த்துக் கொண்டிருந்தபோது வட மாநில வாலிபர்கள் 3 பேர் அங்கு வந்து ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணை மிரட்டி அங்கிருந்து அவரை தூக்கிச் சென்று வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். 

இதனால் அந்த பெண் கத்தி கூச்சலிடமே சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பெண்ணை மீட்டு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

இது குறித்து தகவல் அறிந்த கும்மிப்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் வடமாநில வாலிபர்கள் வலுக்கட்டாயமாக தன்னை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். 

இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாக சுற்றித்திரிந்த 3 வட மாநில வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

பாதிக்கப்பட்ட பெண் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். 

இதுகுறித்து நேற்று புகார் அளித்தும் இதுவரை போலீசார் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒன்று திரண்டு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman kidnapped molested north state youth


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->