சென்னை அருகே பரிதாபம்.! லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி.!
woman killed in under the wheel of the lorry in chennai
சென்னையில் லாரி சக்கரத்தில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை வியாசர்பாடி பாலகிருஷ்ணன் தெரு பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால். இவரது மனைவி நிர்மலா (39). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு வேணுகோபால் உயிரிழந்து விட்டார். இதனால் நிர்மலா அதே பகுதியில் மளிகை கடை ஒன்று வைத்து நடத்தி வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை காய்கறி வாங்குவதற்காக ரமேஷ் என்பவர் உடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது புளியந்தோப்பு ஆட்டுத்தொட்டி அருகே சென்ற போது பின்னால் வந்த லாரி இவர்களது இருசக்கர வாகனத்தில் உரசியதால் நிலை தடுமாறி நிர்மலா கீழே விழுந்துள்ளார்.
இதில் லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் நிர்மலா தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போக்குவரத்து புலனாய்வு போலீசார், நிர்மலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் மற்றும் கிளீனரை கைது செய்தனர்.
English Summary
woman killed in under the wheel of the lorry in chennai