பட்டா மாற்ற லஞ்சம் - கையும் களவுமாக சிக்கிய பெண் வி.ஏ.ஓ.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தையடுத்த கொல்லாங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் - சுகந்தி தம்பதியினர். இதில், கோவிந்தராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டதனால் தனது கணவர் பெயரில் உள்ள சொத்துகளை தனது பெயருக்கு மாற்றம் செய்ய சுகந்தி முயற்சி மேற்கொண்டார்.

அதன் படி கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கொல்லாங்கரை கிராம நிர்வாக அலுவலர் வள்ளி என்பவரிடம் சுகந்தி விண்ணப்பம் செய்தார். இது தொடர்பாக சுகந்தியை பல நாட்களாக கிராம நிர்வாக அலுவலகத்திற்கு அலுவலர் வள்ளி வரவழைத்தார். அதன் படி அலுவலகத்திற்கு வந்த சுகந்தியிடம் அலுவலர் வள்ளி ரூ.3 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் பட்டாவை மாற்றித்தருவதாக தெரிவித்தார். 

ஆனால் லஞ்சம் கொடுக்க சுகந்திக்கு விருப்பம் இல்லாததால், சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூ.2 ஆயிரத்தை சுகந்தியிடம் கொடுத்து கிராம நிர்வாக அலுவலர் வள்ளியிடம் கொடுக்குமாறு தெரிவித்தனர். 

அதன் படி சுகந்தி பணத்தை எடுத்துச்சென்று கிராம நிர்வாக அலுவலர் வள்ளியிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் நுழைந்து வள்ளியை கைது செய்தனர். பின்னர் வள்ளி கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman vao arrested for bribe in thanjavur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->