வாடகைக்கு குழந்தை வாங்கி பிச்சை எடுத்த பெண்கள் - திருச்சியில் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


வாடகைக்கு குழந்தை வாங்கி பிச்சை எடுத்த பெண்கள் - திருச்சியில் அதிர்ச்சி.!

திருச்சி மாவட்டத்தில் 500 ரூபாய்க்கு குழந்தைகளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, தெருவோரங்களில் பெண்கள் பிச்சை எடுத்து வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில், சென்னை போன்ற பெருநகரங்களில் ஆரம்பமாகி, முக்கிய நகரங்களில் மக்கள் கூடும் இடங்களில், கோவில் திருவிழாக்களில் பெண்கள் சிலர் கையில் குழந்தைகளை வைத்துக் கொண்டு பிச்சை எடுப்பதை வழக்கமாகக் வைத்துள்ளனர். 

இந்த நிலையில், நேற்று ஆடி அமாவசையை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கத்தில் காவிரிக்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக ஆயிரக்கணக்கில் மக்கள் கூடியிருந்தனர்.

அப்போது 70 க்கும் மேற்பட்ட பெண்கள், கைகளில் பச்சிளம் குழந்தைகளை வைத்துக் கொண்டு பிச்சை எடுத்து வந்தனர். இந்த சம்பவம் பொதுமக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய போது சுமார் 500 ரூபாய்க்கு குழந்தைகளை வாடகைக்கு வாங்கி அந்த பெண்கள் பிச்சை எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஸ்ரீரங்கம் பகுதியில் குழந்தைகளை வைத்துக் கொண்டு பிச்சையெடுத்த பெண்களை போலீஸார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

womans begged with childrens in trichy sri rangam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->