இன்ஸ்டா மூலம் இளைஞர்களை கஞ்சா வியாபாரியாக மாற்றிய கில்லாடி பெண் - சென்னையில் பயங்கரம்.!
women arrested for sales kanja in chennai
சென்னையில் உள்ள திரிசூலம் ரெயில்வே கேட் அருகே போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்குரிய வகையில் பெண் ஒருவர் சென்று கொண்டிருந்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், அந்த பெண்ணிடம் இருந்த பையை சோதனை செய்ததில் சுமார் மூன்று கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, போலீசார் உடனடியாக அந்த இளம்பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அந்த பெண் திரிபுரா மாநிலத்தில் உள்ள உதய்பூரை சேர்ந்த பாயல் தாஸ் என்பதும், அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருப்பதும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட பாயல் கடந்த 3 ஆண்டுகளாக சென்னையில் தங்கியிருந்து கஞ்சா கடத்தி, இன்ஸ்டாகிராமில் இளைஞர்களுக்கு காதல் வலை வீசி, அவர்களில் சிலரை கஞ்சா வியாபாரிகளாக மாற்றியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து பாயல் தாஸை போலீசார் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்த போலீசார், இந்த வழக்கு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் ஒருவர் கஞ்சா விற்பனை செய்யபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
women arrested for sales kanja in chennai