அரசு மருத்துவமனை அவலம்: தவறான சிகிச்சையால் 1 வருடமாக கோமாவில் இருக்கும் பெண்..! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகில் உள்ள தெள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சின்னராஜ் - குமாரி தம்பதியர். இவர்களது மகள் ஜெயந்திக்கு, ராம்பிரகாஷ் என்பவருடன் திருமணம் நடந்தது. இதையடுத்து கர்ப்பமடைந்த ஜெயந்தியை பிரசவத்திற்காக ஆரணி அரசு மருத்துவமனையில் கடந்த ஆண்டு மே 25ம் தேதி அவரது உறவினர்கள் சேர்த்தனர். 

அங்கு ஜெயந்தியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் குழந்தையின் அசைவு தெரியவில்லை என்று தெரிவித்துள்ளனர். ஆனால் அவரது உறவினர்கள் ஜெயந்தி வயிற்றில் குழந்தையின் அசைவு தெரிவதாக தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து ஜெயந்திக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியில் எடுத்தனர். இதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்ததாக தெரிகிறது. ஆனால் இதையடுத்து ஜெயந்தியின் உடல்நிலை மோசமானதால் அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைத்துள்ளனர். 

ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆரணி அரசு மருத்துவமனையில் தவறாக சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளதால் அவர் கோமாவிற்கு சென்று விட்டதாக தெரிவித்துள்ளனர். அங்கு 2 மாதம் சிகிச்சை பெற்ற நிலையில், அவரை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

 

இங்கு அவர் 13 மாதங்களாக தொடர் சிகிச்சையில் இருந்தும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், அவரது உறவினர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து வேலூர் 
சுகாதாரத் துறை சார்பில் ஆரணி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்களிடம் விசாரணை நடத்தப் பட்டது. 

இதையறிந்த ஜெயந்தியின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Women Being in Coma in More than a Year Due to Wrong Treatment In Govt Hospital


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->