வேலூர் : பெண்கள் மட்டுமே பங்கு பெறும் வினோத திருவிழா.. ஆண்களுக்கு அனுமதி இல்லை..!! - Seithipunal
Seithipunal



வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தொங்குமலை என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 3,000 க்கும் அதிகமான மலை வாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அருகில் உள்ள 12 கிராமங்களை சேர்ந்த மலை வாழ் மக்களுடன் இணைந்து காளியம்மனுக்கு திருவிழா நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான திருவிழா சமீபத்தில் தொடங்கியது. இதற்காக மலை வாழ் மக்கள் அனைவரும் அவர்கள் முறைப்படி காளியம்மனுக்கு காப்பு கட்டி விரதம் இருந்து, காளியம்மனுக்கு ஊர்வலமாக சீதனம் கொண்டு வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து வழிபட்டனர். 

இந்த திருவிழாவின் சிறப்பம்சமே இந்த 12 கிராமங்களை சேர்ந்த ஆண்களுக்கு மட்டும் தனியாக 3 நாட்களும், பெண்களுக்கு தனியாக கடைசி ஒரு நாளும் திருவிழா நடைபெறும். அப்போது மாற்று பாலினத்தவருக்கு விழாவில் அனுமதி இல்லை என்ற நடைமுறையை பின்பற்றி வருகின்றனர். 

அந்த வகையில் பெண்களுக்கு மட்டுமான திருவிழா நேற்றும் முன்தினம் நடைபெற்றது. அதில் பெண்கள் அனைவரும் விடிகாலையிலேயே கிராம குளத்தில் குளித்து விட்டு அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து பாரம்பரிய நடனம் மற்றும் கும்மி என்று ஆடி களித்தனர். 

இந்த திருவிழாவில் பெண்கள் 2 பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து சிறப்பு வழிபாடு செய்தனர். இந்நிகழ்ச்சியில் ஆண்கள் யாருக்கும் அனுமதி இல்லை. அத்துமீறி ஆண்கள் யாரேனும் நுழைந்தால் அவர்களை விரட்டி அடிப்பது மட்டுமல்லாமல் ரூ. 5000 அபராதமும் விதிக்கப் படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Women Only Participated in a Strange Festival in Vellore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->