உயிருக்கு போராடிய குழந்தையை இறந்ததாக கூறிய மருத்துவர்கள் - கன்னியாகுமரியில் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


சிகிச்சைக்கு வந்த குழந்தையை இறந்ததாக கூறிய மருத்துவர்கள் - கன்னியாகுமரியில் அதிர்ச்சி.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேரேக்கால் பகுதியைச் சேர்ந்தவர்கள் தனிஷ்- ஷைனி தம்பதியினர். இவர்களுடைய மூன்று வயது ஆண் குழந்தைக்கு கடந்த மாதம் 25 ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து பெற்றோர்கள் குழந்தையை பார்வதிபுரத்தில் உள்ள ஜெயசேகரன் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வெறிநாய்க்கடிக்கு சிகிச்சை அளிப்பதாக தெரிவித்துள்ளனர். 

அதன் பின்னர் பெற்றோர்கள் குழந்தையை அங்கிருந்து சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை உண்மை என்று நம்பாத பெற்றோர் குழந்தையை கேரளாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு குழந்தைக்கு தற்போது எலிக்காய்ச்சல் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. 

உயிருக்கு போராடி வந்த குழந்தையை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

wrong treatment to children in kanniyakumari


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->