தவெக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு - மத்திய அரசு உத்தரவு.!
Y category security to tvk leader vijay central government order
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி தற்போது இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை மையமாக கொண்டு தேர்தல் பணிகளை விஜய் மேற்கொண்டு வருகிறார்.
தொடர்ந்து புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து வரும் நடிகர் விஜய் சமீபத்தில், தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை சந்தித்து அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தை வருகிற 26-ந்தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், நடிகர் விஜய் மார்ச் முதல் வாரத்தில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் த.வெ.க. தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள ஒய் பிரிவில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என்று 8 முதல் 11 பேர் பாதுகாப்பு அளிப்பர். அதாவது விஜய்க்கு தமிழ்நாட்டிற்குள் மட்டும் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Y category security to tvk leader vijay central government order