#அரியலூர் : மது போதையில் 50 வயது பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர் கைது.!
Young man arrested for Raped 50 year old woman in Ariyalur
அரியலூர் மாவட்டத்தில் 50 வயதுடைய பெண்ணை மது போதையில் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (35). இவர் சம்பவத்தன்று மதுபோதையில் எதிர்வீட்டில் வசித்து வந்த மனநலம் பாதித்த சத்தியா(50) என்ற திருமணமான பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்தப் பெண் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர் இதைபார்த்த ராஜேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து சத்யாவின் கணவர் ரங்கநாதன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ராஜேஷை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Young man arrested for Raped 50 year old woman in Ariyalur