2 சிறுவர்களை மிரட்டி ஓரினசேர்க்கையில் ஈடுபட முயன்ற வாலிபர்..! திருப்பூரில் பரபரப்பு...!
Young man arrested for who threatened 2 boys and tried to engage in homosexuality in Tiruppur
திருப்பூர் மாவட்டத்தில் 2 சிறுவர்களை மிரட்டி ஓரினசேர்க்கையில் ஈடுபட முயன்ற வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் கடத்தூர் பகுதியை சேர்ந்தவர் அப்புகுட்டி என்கின்ற ஈஸ்வரன் (35). இவர் நேற்று முன்தினம் அமராவதி பகுதிக்கு கூலி வேலைக்கு சென்றுள்ளார். அப்பொழுது அண்ணன்-தம்பியான 13 மற்றும் 8 வயது உடைய சிறுவர்கள் வயலுக்கு சென்று விட்டு வந்துள்ளனர். இந்நிலையில் ஈஸ்வரன் இரண்டு சிறுவர்களையும் வீட்டில் அழைத்து விடுவதாக கூறி மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றுள்ளார்.
ஆனால் ஈஸ்வரன் இரண்டு சிறுவர்களையும் முதலைப் பண்ணைக்கு அருகே உள்ள சுடுகாட்டு பகுதிக்கு அழைத்துச் சென்று, ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் இதுகுறித்து பெற்றோரிடம் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதையடுத்து வீட்டிற்கு வந்த சிறுவர்கள் இதுகுறித்து பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவர்களின் பெற்றோர் உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ஈஸ்வரனை கைது செய்தனர்.
English Summary
Young man arrested for who threatened 2 boys and tried to engage in homosexuality in Tiruppur