மது போதையில் கழிவுநீர் கால்வாய்க்குள் விழுந்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!
Young man fell into a sewer under the influence of alcohol and died in erode
ஈரோடு மாவட்டத்தில் மது போதையில் கழிவு நீர் கால்வாய்க்குள் தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் செங்கோடம்பள்ளம் அரசமர விநாயகர் கோவில் பகுதியை சேர்ந்த மாகாளி என்பவரது மகன் ரமேஷ் (30). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால், மது அருந்திவிட்டு சரியாக வீட்டுக்கு செல்லாமல் அடிக்கடி சாலை ஓரங்களில் படுத்து தூங்கி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் மது அருந்திய ரமேஷ் செங்கோடம்பள்ளம் பாலத்தின் மேற்பகுதியில் போதையில் படுத்து தூங்கியுள்ளார். இதையடுத்து நள்ளிரவு திடீரென ரமேஷ், குடிபோதையில் கழிவுநீர் கால்வாய்க்குள் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இன்று காலை அந்த வழியாக வந்தவர்கள் ரமேஷ் இறந்து கிடப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்து இது குறித்து வீரப்பன்சத்திரம் காவல்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரமேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Young man fell into a sewer under the influence of alcohol and died in erode