அதிக சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக பெண்ணை கடத்திய வாலிபர்.! போலீசார் வலைவீச்சு.!
Young man kidnapped the woman by offering her a job with a high salary in Dindigul
திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணை கடத்திச் சென்ற வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் தெப்பத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டி. இவரது மனைவி சரஸ்வதி(34). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் சரஸ்வதிக்கும், மதுரை மாவட்டம் குருவித்துறை பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பிரகாஷ், தான் முறுக்கு கம்பெனியில் வேலை பார்ப்பதாகவும், அங்கு வந்தால் உனக்கும் அதிக சம்பளம் கிடைக்கும் என்று சரஸ்வதியிடம் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.
இதைக்கேட்ட சரஸ்வதி, வீட்டில் யாரிடமும் கூறாமல் பிரகாஷ் உடன் சென்றுள்ளார். இதையடுத்து மனைவி காணவில்லை என்பதால் கணவர் தங்கபாண்டி பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளார். ஆனால் எங்கு தேடியும் மனைவி கிடைக்காததால், இது குறித்து காவல் நிலையத்தில், பிரகாஷ் தான் சரஸ்வதியை கடத்திச் சென்றிருக்கக்கூடும் என்று தங்கப்பாண்டி புகார் கொடுத்தார். மேலும் மனைவியை மீட்டுத்தரும் வரை காவல் நிலையத்தில் இருந்து செல்ல மாட்டேன் என்று கூறி அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து போலீசார் தங்கப்பாண்டியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சரஸ்வதியையும், கடத்திச்சென்ற வாலிபரையும் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.
English Summary
Young man kidnapped the woman by offering her a job with a high salary in Dindigul