முன் விரோதத்தால் இளைஞர் தலையில் கல்லைப்போட்டு கொன்ற கொடூர சம்பவம்.! - Seithipunal
Seithipunal


முன் விரோதத்தால் இளைஞர் தலையில் கல்லைப்போட்டு கொன்ற கொடூர சம்பவம்.!

சென்னையில் உள்ள அயனாவரம் பகுதியில், குட்டியப்பன் தெருவைச் சேர்ந்தவர் கருணா. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் துக்க நிகழ்ச்சி ஒன்றில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகராறில் யோனா என்ற இளைஞர் காயமடைந்தார். 

உடனே அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் கருணா உட்பட அவரது நண்பர்கள் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் கருணா கடந்த மார்ச் மாதம் ஜாமினில் வெளியே வந்துள்ளார். 

இதையறிந்த யோனா மற்றும் அவரது நண்பர்கள் 7 பேர் கருணாவை பழி தீர்க்கும் விதமாக அவர் தலையின் மீது கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். 

அதன் படி அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கருணாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்குது அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் போலீசார் தீவிரமாக செயல்பட்டு குற்றவாளிகள் ஏழு பேரில் ஒருவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young man kill for enmity terrible in chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->