சாலை விதிமுறைகளை மீறி வாலிபர் செய்த செயல்.! லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சோகம்.!
Young man who violated road rules got stuck in the wheel of a lorry and died in Tiruppur
திருப்பூர் மாவட்டத்தில் சென்டர் மீடியனில் ஏறி சாலையின் மறுபுறம் செல்ல முயன்ற நபர் தவறி விழுந்து லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியை சேர்ந்தவர் மகாதேவன். இவர் பனியன் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அனுப்பர்பாளையம் பகுதியில் நேற்று மதியம் மகாதேவன், சாலை விதிகளை மீறி சென்டர் மீடியனில் ஏறி சாலையின் மறுபக்கம் செல்ல முயன்றுள்ளார்.
அப்பொழுது திடீரென கால் தவறி கீழே மகாதேவன் விழுந்துள்ளார். அப்பொழுது அந்த வழியாக வந்த லாரியின் பின் சாக்கரம் மகாதேவன் மீது ஏறி இறங்கியதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்துள்ளார்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மகாதேவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Young man who violated road rules got stuck in the wheel of a lorry and died in Tiruppur