திருவாரூர் || காதலித்து ஏமாற்றிய இளைஞர்.. இளம்பெண் செய்த விபரீத செயல்..! - Seithipunal
Seithipunal


காதலன் திருமணத்திற்கு மறுத்ததால் கர்ப்பிணி மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் கருப்பூர் பகுதியை சேர்ந்தவர் சாவித். பக்கத்து ஊரை சேர்ந்த மாணவி ஒருவருடன் பள்ளி பருவத்தில் இருந்தே பழகி வந்துள்ளார் அது நாளடைவில் காதலாக மாறியது. திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சாவித் அந்த மாணவியுடன் பலமுறை நெருக்கமாக இருந்துள்ளார்.

இந்நிலயில், அந்த மாணவி கர்ப்பமாகி உள்ளார். தான் கர்பமாக இருப்பதை  அறிந்து மாணவி சாவித்திரி திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி உள்ளார். அதற்கு சாதித்து மறுக்கவே இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. நிலையை மன உளைச்சலில் இருந்த மாணவி வீட்டில் இருந்த எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இரண்டு நாட்கள் கழித்து அவர் ரத்த வாந்தி எடுத்த நிலையில் அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கருகலைந்து விட்டதாக தெரிவித்தனர்.  மேலும் மாணவிக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தலைமறைவாக உள்ள சாவித்தை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young Woman attempt Suicide In Thiruvarur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->