திருநெல்வேலி : தடுப்பு சுவரில் மொபட் மோதி விபத்து - தம்பி பலி, அண்ணன் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் பாலத்தின் தடுப்பு சுவரில் மொபட் மோதி விபத்தில் தம்பி உயிரிழந்தார் மற்றும் அண்ணன் படுகாயமடைந்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் பாலபாக்கியா நகர் பகுதியை சேர்ந்தவர் பேராட்சி செல்வன். இவருடைய மகன்கள் பிரபு சங்கர் (17) மற்றும் மகாராஜன்(16). இந்நிலையில் நேற்று பள்ளி விடுமுறை என்பதால் அண்ணன்-தம்பி இருவரும் மொபட்டில் வெளியே சென்றனர். அப்பொழுது தச்சநல்லூர் பாலத்தில் சென்றபோது எதிர்பாராத விதமாக பாலத்தின் தடுப்பு சுவரில் மொபட் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயமடைந்த இரண்டு பேரையும் அவ்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் மகாராஜன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து பிரபு சங்கருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Younger brother killed and elder brother injured in moped accident in tirunelveli


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->