4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.! வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை.!
Youngman arrested for sexually harassing 4 year old girl in virudhunagar
அருப்புக்கோட்டையில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (31). இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு நான்கு வயது உடைய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு பெருமாளை கைது செய்தனர்.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த், நாலு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து பெருமாளுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூபாய் 10 லட்சம் வழங்க பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.
English Summary
Youngman arrested for sexually harassing 4 year old girl in virudhunagar