ஈரோட்டில் அதிரடி சோதனை: தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்.! வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலையடுத்து கோபிசெட்டிபாளையம் போலீசார் ஒத்தகுதிரை பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அப்பகுதியில் உள்ள ஒரு மளிகை கடை ஒன்றில் போலீசார் சோதனை நடத்தியதில், தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து அந்த மளிகை கடையில் இருந்த 2.42 கிலோ எடையுள்ள 11 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து கார்த்திகேயன்(38) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youngman arrested for Tobacco products seized in erode


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->