கரூர் அருகே வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த வாலிபர்.! போலீசார் தீவிர விசாரணை.! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்தில் வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த வாலிபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி மூகாம்பிகை நகர் பகுதியை சேர்ந்தவர் ஏசி மெக்கானிக் லட்சுமணன் (37). இவரது மனைவி தேன்மொழி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த ஒரு வருடமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இதனால் லட்சுமணன் தற்போது கரூர் கணபதிபாளையம் பகுதியில் தங்கி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அவரது வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து இது குறித்து தாந்தோணிமலை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த புகாரையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டிற்குள் அழுகிய நிலையில் கிடந்த லட்சுமணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, லட்சுமணன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது கொலை செய்தார்களா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youngman found dead in a rotting state at home in karur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->