விவசாயத்தில் நஷ்டம்.! வாலிபர் எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் கோம்பை அரண்மனை தெரு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (37). இவர் உடும்பன் சோலையில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தார். மேலும் அப்பகுதியில் உள்ள ஏலத் தோட்டத்தை குத்தகை எடுத்து ஸ்ரீகாந்த் விவசாயம் பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் மன வேதனையில் இருந்து வந்த ஸ்ரீகாந்த் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கோம்பை போலீசார், ஸ்ரீகாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பு:

[ உங்களுக்கு தற்கொலை எண்ணம் தோன்றினால் உடனே அழையுங்கள்:

மாநில சுகாதார துறை தற்கொலை தடுப்பு உதவி எண் - 104

சினேஹா தற்கொலை தடுப்பு மையம் - 044-24640050 

உங்களின் தோழன், தோழியாக பரிவுடன் பேச தயார். உங்கள் தனிப்பட்ட விவரம் வெளியிடப்படாது. பயமின்றி அழையுங்கள். புது வாழ்வை நம்பிக்கையுடன் தொடங்குங்கள்]


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youngman suicide in theni


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->