தாய் வாங்கிய கடனை மகனிடம் கேட்ட வியாபாரி - ஆத்திரத்தில் கடையை சூறையாடிய வாலிபர் கைது.!! - Seithipunal
Seithipunal


தாய் வாங்கிய கடனை மகனிடம் கேட்ட வியாபாரி - ஆத்திரத்தில் கடையை   சூறையாடிய வாலிபர் கைது.!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை அருகே கோழிப்போர்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜான்ரோஸ். முதியவரான இவர் தன் வீட்டை ஒட்டியே மளிகைக்கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். 

இது அதிகளவில் பொருளாதார வசதி இல்லாதவர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் ஜான்ரோஸ் கடனுக்கு பொருள்கள் கொடுப்பது வழக்கம். அந்த வகையில், அதே பகுதியைச் சேர்ந்த அஸ்வின் சிஜோ என்பவரின் தாயாரும் அந்தக் கடையில் வந்து கடனுக்குப் பொருள்கள் வாங்குவார். 

ஆனால், அவர் நீண்டகாலமாக பணத்தைத் திரும்பக் கொடுக்கவே இல்லை. இந்த நிலையில் ஜான்ரோஸ் தன் கடைக்குப் பொருள்கள் வாங்க வந்த அஸ்வின் சிஜோவிடம் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டுள்ளார்.

அதற்கு அஸ்வின் சிஜோ கடன் தொகையை எப்படி என்னிடம் கேட்கலாம்? என்று ஆத்திரப்பட்டு, தன் நண்பர்களுடன் சேர்ந்து ஜான் ரோஸின் கடையைச் சூறையாடி விட்டு ஜான்ரோஸின் வீடுபுகுந்து கொலை மிரட்டலும் விடுத்தார்.

இந்த சம்பவம் குறித்து ஜான்ரோஸ் கொடுத்தப் புகாரின் பேரில் போலீசார் அஸ்வின் சிஜோ மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்து, அபினேஷைக் கைது செய்த போலீஸார் தப்பியோடிய மற்றவர்களையும் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth arrested for attack old man in kanniyakumari


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->