காரைக்காலை உலுக்கிய சிறுவன் கொலை - வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


காரைக்கால் திருமலைராஜன் ஆற்றுப்பாலம் அருகே உள்ள ஒயிட் ஹவுஸ் காலனியை சேர்ந்தவர் சிங்காரவேலு என்பவரின் மகன் சந்தோஷ். எட்டாம் வகுப்பு படித்து விட்டு விடுமுறையில் இருந்து வந்த இவர் நேற்று மதியம் தனது நண்பர்களுடன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். 

அப்போது, திடீரென மாணவன் காணாமல் போனதால் பதற்றமடைந்த அவரது பெற்றோர்கள் அவரைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில், மாணவன் சந்தோஷ் இரவு 7 மணி அளவில் வீட்டின் அருகே வீட்டுக் காயங்களுடன் கொலை செய்யப்பட்டுக் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் கதறி அழுதனர். இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். 

அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவன் சந்தோஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொலை செய்த மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த பத்தொன்பது வயது வாலிபரும், மாணவன் சந்தோஷும் அந்த பகுதியில் விளையாடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில், போலீசார் சிறுவன் கொல்லப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபரை கைது செய்துள்ளனர். மயிலாடுதுறையில் கைதான வாலிபரை காரைக்காலுக்கு அழைத்து சென்று ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth arrested for school student murder case in karaikal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->