சென்னை || சிமெண்ட் ஓடுகளை பிரிக்க சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்..!
Youth Death in Thandaiyar Pettai
சிமெண்ட் ஓடுகளை பிரித்தபோது 30 அடி உயரத்தில் இருந்து விழுந்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தண்டையார்பேட்டை அம்மணி அம்மன் பகுதியை சேர்ந்தவர் சங்கர். வெல்டிங் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று எஸ். எம். என் சாலையில் உள்ள வீட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த ஓடுகளை பிரித்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உடன் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறை அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிமெண்ட் ஓடு பிரிக்கும் பொழுது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Youth Death in Thandaiyar Pettai