கடலூரில் ஓரினசேர்க்கை விபரீதம், நியாயவிலைக் கடை ஊழியரைக் குத்தி கொன்ற இளைஞர் கைது.!
youth killed fair price shop employee
கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி அருகே மாளிகை மேடு புது காலனியைசேர்ந்தவர் திலீப் குமார் வயது 57 . இவர் பண்ருட்டி அருகே வல்லத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.
விடுமுறை நாளான கடந்த 23-ந் தேதி அன்று இரவு7 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் நீண்ட நேரத்திற்கு பிறகும் வீடு திரும்பாததால் வீட்டில் இருந்தவர்கள் அக்கம்பக்கத்தில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை.அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்கள் பண்ருட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இதற்கிடையில், திலீப் குமார் அதே பகுதியில் உள்ள சுந்தர்ராஜன் என்பவரின் கரும்புதோட்டத்தில் பிணமாக கிடப்பதை பார்த்தனர். இந்த தகவலை உடனே பண்ருட்டி காவல்துறைக்கு தெரிவித்தனர். இந்நிலையில், போலீசார் அவரது உடலை கைப்பற்றி பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பிணமாககிடந்த திலிப் குமார்மீது மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது சினிமா பட பாணியில் மிளகாய் பொடி தூவி கொலை செய்த போல் இருந்தது. இவரை யார் கொலை செய்தனர்? எதற்காக கொலை செய்தனர்? என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதற்காக கடலூரில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டதில், மோப்பநாய் கொலை நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்துக் கொண்டு அவரது வீட்திற்குள் நுழைந்தது. பின்னர் அதே இடத்தில் சுற்றி வந்தது.
இதனால் இந்த கொலையில் அவரது உறவினர் யாருக்காவது தொடர்பு இருக்குமா? வேறு ஏதாவது தொடர்புகளால் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பாரா? என பல்வேறு வடிவங்களில் போலீசார் விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில், அந்தப் பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்றில் இருந்த கண்காணிப்பு கேமரா மற்றும் திலீப் குமாரின் செல்போன் சிக்னல் ஆகியவற்றை ஆராய்ந்தனர்.
போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த மோட்டார் சைக்கிள் மெக்கானிக் அரவிந்த் (24) என்பவனை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அரவிந்த் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினார்.
இதானல் அரவிந்தை தனி இடத்தில் வைத்து விசாரித்தனர். அந்த விசாரணையில் நியாயவிலைக் கடை ஊழியர் திலிப் குமாரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டான்.
அவர் அளித்த வாக்குமூலத்தில், "தனக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்க உள்ள நிலையில் பணம் தேவைப்பட்டதால் பணத்திற்காக திலீப் குமாரை கொலை செய்ய முடிவு செய்தேன். திலீப் குமாருக்கு ஓரின சேர்க்கை பழக்கம் உள்ளதால், அவரோடு நான் பலமுறை ஓரினசேர்க்கை ஈடுபட்டுள்ளேன். அவரிடம் வட்டிக்கும் பணம் வாங்கி உள்ளேன் என்று கூறினார்.
திருமண செலவுக்கு பணம் கேட்டு இல்லை என்று சொன்னதால் அவரை ஓரின சேர்க்கைக்கு அழைத்துச் சென்று ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அவரை கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்து, போலீஸ் நாய் மோப்பம் பிடிக்காமல் இருக்க அவரது உடம்பில் மிளகாய் பொடி தூவி விட்டு அவரிடம் இருந்து நகைகளை எடுத்துக் கொண்டு தப்பி சென்றேன்.
பின்னர் அவரது குடும்பத்தினருடன் அவரை தேடுவது போல நடித்து போலீசில் மாட்டிக் கொண்டேன் என்று கூறினான். இதையடுத்து அவனை கைதுசெய்து கோர்ட்டில்ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அவனிடமிருந்து 2 பவுன் செயின், கொலைக்கு பயன்படுத்திய ஆயுதம் ,கொலை செய்த போது அவன் உடுத்தி இருந்த ரத்தகறைபடிந்த அவனது உடைகள் என பலவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
நியாய விலைக்கடை ஊழியர் கொலை வழக்கில் ஈடுபட்டு குற்றவாளியைக் கண்டுபிடித்த பண்ருட்டி போலீஸ் டிஎஸ்பி சபியுல்லா, இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசாரை கடலூர் எஸ்பி சக்தி கணேஷ் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்
English Summary
youth killed fair price shop employee