#கோவை || உடுமலையில் பூஜ்ய நிழல் தினம்.! - Seithipunal
Seithipunal


பூஜ்ய நிழல் தினம் || விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், அறிவியல் பலகை மற்றும் கலிலியோ அறிவியல் கழகத்தின் சார்பாக கோவை உடுமலையில் பூஜ்ய நிழல் தினம் உற்று நோக்கபட்டது. 

வருடத்திற்கு இரு முறை மட்டுமே வருகின்ற இந்த அரிய வானியல் நிகழ்வான பூஜ்ஜிய நிழல் தினத்தன்று நண்பகல் நேரத்தில் அதனை உற்றுநோக்க உடுமலை நேதாஜி மைதானத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. 


 
ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செயல்பாட்டு கருவிகள் மூலம் காலை 11 மணிமுதல் மதியம் 1 மணிவரை பொது மக்களுக்கும் மாணவர்களுக்கும் பூஜ்ய நிழல்  தினம் ஏன் ஏற்படுகிறது? இதற்கான காரணம் என்ன? என்பது பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டது.

சரியாக 12.21 மணிக்கு நிழலானது பூஜ்ஜியமாக இருந்ததை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த அரிய வானியல் நிகழ்வை கண்டு ரசித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Zero Shadow Day Udumalai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->