நியாயவிலை கடைகளில் தரமான உணவுப்பொருட்கள் வழங்கப்படுகிறது - இந்திய உணவு கழகம் தகவல்.! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி அருகே சேவூர் இந்திய உணவு கழக கிடங்கில் மண்டல மேலாளர் ரத்தன் சிங் மீனா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது: 

"தற்போது சேவூர் கிடங்கில் இருபத்தெட்டு ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியும், 6 ஆயிரத்து 52 மெட்ரிக் டன் கோதுமையும் இருப்பில் உள்ளது. இந்திய உணவு கழகம் மூலம் வழங்கப்படும் உணவுகள் தரமானதாக உள்ளது என்பதால், தமிழக அரசு இந்திய உணவு கழகத்திடம் இருந்து 40 சதவிகித உணவு பொருட்களை கொள்முதல் செய்கிறது. 

இந்த கிடங்கின் மூலம் வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 15,17,788 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் கோதுமை வினியோகிக்கப்படுகிறது. 

இந்த கிடங்கில் இருந்து கொரோனா காலத்தில் பிரதமரின் ஏழைகளுக்கு உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் 5,93,306 மெட்ரிக் டன் அரிசியும் 34,975 மெட்ரிக் டன் கோதுமையும் வினியோகம் செய்யப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Zonal Manager Ratan Singh Meena vist Food Corporation of India Warehouse in sevur


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->