ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ சீரிஸ் அறிமுகம்; விரைவில் முன்பதிவு மற்றும் விற்பனை துவக்கம்! - Seithipunal
Seithipunal


ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.

விலை விவரங்கள்:

ஐபோன் 14 ப்ரோ 128 ஜிபி மாடலின் விலை - ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 900.

ஐபோன் 14 ப்ரோ 256 ஜிபி மாடலின் விலை - ரூ. 1 லட்சத்து 39 ஆயிரத்து 900.

ஐபோன் 14 ப்ரோ 512 ஜிபி மாடலின் விலை - ரூ. 1 லட்சத்து 59 ஆயிரத்து 900.

ஐபோன் 14 ப்ரோ 1 டிபி மாடலின் விலை - ரூ. 1 லட்சத்து 79 ஆயிரத்து 900.

ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் 128 ஜிபி மாடலின் விலை - ரூ. 1 லட்சத்து 39 ஆயிரத்து 900.

ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் 256 ஜிபி மாடலின் விலை - ரூ. 1 லட்சத்து 49 ஆயிரத்து 900.

ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் 512 ஜிபி மாடலின் விலை - ரூ. 1 லட்சத்து 69 ஆயிரத்து 900.

ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் 1 டிபி மாடலின் விலை - ரூ. 1 லட்சத்து 89 ஆயிரத்து 900.

ஐபோன் 14 ப்ரோ சீரிஸ் மாடல்களின் முன்பதிவு செப்டம்பர் 9-ம் தேதி துவங்குகிறது. மேலும், இதன் விற்பனை செப்டம்பர் 16-ம் தேதி துவங்குகிறது.

இதன் சிறப்பு அம்சங்கள்:

ஐபோன் 14 ப்ரோ மாடலில் 6.1 இன்ச் 2566x1179 பிக்சல் OLED 460ppi சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலில் 6.7 இன்ச் 2796x1290 பிக்சல் OLED 460ppi சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.


 
6-கோர் ஏ16 பயோனிக் பிராசஸர்,128 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி, 1 டிபி மெமரி ஆப்ஷன்கள் மற்றும் ஐஒஎஸ் 16 வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன், வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் மற்றும் டூயல் சிம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 48MP வைடு ஆங்கில் கேமரா, 12MP 120 டிகிரி அல்ட்ரா வைடு இரண்டாவது கேமரா, 12MP 3x டெலிபோட்டோ கேமரா மற்றும் 12MP ட்ரூ டெப்த் செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

இதில், 5ஜி, ஜிகாபிட் கிளாஸ் எல்டிஇ, வைபை 6, ப்ளூடூத் 5.3 மற்றும் லித்தயம் அயன் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இதில்15 வாட் மேக்சேப் வயர்லெஸ் சார்ஜிங், பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் ஸ்பேஸ் பிளாக், சில்வர், கோல்டு மற்றும் டீப் பர்பில் என நான்கு விதமான நிறங்களில் கிடைக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Apple iPhone 14 Pro series launched


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->