குறைந்த விலையில் ஏத்தர் 450எஸ் மாடல் விவரங்கள் வெளியீடு..! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரித்து விற்பனை செய்யும் முன்னணி நிறுவனமாக ஏத்தர் எனர்ஜி நிறுவனம் திகழ்கிறது. இது மக்களிடையே எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், எளிதாக பெறவும் குறைந்த விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில் குறைந்த விலையில் புதிய ஏத்தர் 450 எஸ் மாடலை என்ட்ரி லெவல் எலக்ட்ரிக் ஸ்கூட்டராக அதிகாரப்பூர்வ வலைதளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாடல் ஏத்தர் 450 பிளஸ் மற்றும் 450 எக்ஸ் ஆகியவற்றை விட குறைந்த விலை மாடலாகும். மேலும் இந்த ஸ்கூட்டர் சந்தையில் விற்பனையாகும் 125சிசி பெட்ரோல் ஸ்கூட்டருக்கு இணையாக தயாரிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த ஸ்கூட்டரில் 3 கிலோ வாட் ஹவர் பேட்டரி உள்ளதால் ஒரே சார்ஜில் 115 கிலோமீட்டர் வரை பயணிக்கும் தன்மை கொண்டது. அதிகபட்சமாக 90 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லக் கூடியது. நகர பயன்பாட்டிற்காக பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்ட இந்த ஸ்கூட்டரின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.1,29,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஏத்தர் 450எஸ்ஸ் கூட்டரின் முன்பதிவு வரும் ஜூலை மாதம் முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ather introduced new 450s model at low price in india


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->