மனிதர்களுக்கு நீண்ட ஆயுள்; அவர்களுக்கு சாவே கிடையாது; புதிய பாக்டீரியா கண்டுபிடிப்பு..! - Seithipunal
Seithipunal


மனிதர்களை நீண்ட நாட்கள் வாழ வைக்கும் பாக்டீரியாவை, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த பாக்டீரியா சுமார் 35 லட்சம் வருடங்களுக்கு முந்தையது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

நீண்ட கால ஆயுள் என்பது மனிதர்களும் விருப்பும் ஒன்று. ஆனால் அதற்கான மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது. தற்போது புதிய பாட்டீரியாவை ஆய்வாளர்கள் நீண்ட ஆயுளுக்காக பயன்படுத்த முயன்று வருகின்றனர்.

அதாவது செர்பியா பகுதியில் உறைபனியில் செய்த ஆய்வின்போது இந்த பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்திருப்பதாக கூறுகின்றனர். கடந்த 2009ஆம் ஆண்டு மாஸ்கோ மாநில பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் தலைவரான அனடோலி ப்ரூச்கோவ் இந்த பாக்டீரியாவை கண்டுபிடித்துள்ளார். இதற்கு அவர் 'பேசிலஸ் எஃப்' என்றும் பெயர் வைத்துள்ளார்.

இந்த பாக்டீரியாவை வைத்து பல்வேறு ஆய்வுகளை அவர் மேற்கொண்டு வந்துள்ளார். பொதுவாக சாதாரண பாக்டீரியாக்களின் ஆயுட்காலம் வெறும் 12 மணி நேரம்தான். ஆனால் சில பாக்டீரியாக்கள் ஒரு சில ஆயிரம் ஆண்டுகள் வரை கூட வாழும் தன்மை கொண்டது. 

ஆனால், இந்த 'பேசிலஸ் எஃப்' பாக்டீரியா, ஏறத்தாழ 35 லட்சம் ஆண்டுகள் உயிருடன் வாழ்ந்திருக்கிறது. அதுவும் உறைபனியிலும், தீவிரமான கதிர்வீச்சு தாக்குதலிலும் பாக்டீரியா உயிர் பிழைத்திருந்திருக்கிறது. இத்தனை ஆண்டுகள் இந்த பாக்டீரியா உயிர் பிழைத்திருப்பது எப்படி சாத்தியம் என்பதே விஞ்ஞானிகளின் ஆச்சர்யமடைந்துள்ளனர்..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bacillus f 3 5 million year old bacteria


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->