மைக்ரோசாஃப்ட் செயலிழப்புக்கு ரஷியாவின் சைபர் தாக்குதல் தான் காரணமா?! - Seithipunal
Seithipunal



நேற்று (ஜூலை 19) உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் மைக்ரோசாஃப்ட்  தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக உலகம் முழுவதும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. மேலும் உலக முழுவதும் பல்வேறு வர்த்தகங்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன. 

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சைபர் பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்காவின் 'கிரவுட் ஸ்ட்ரைக்' நிறுவனம் 'பால்கன் சென்சார்' மென்பொருளை நேற்று அப்டேட் செய்த போது மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்பத்தில் கோளாறு ஏற்பட்டது. 

இதையடுத்து மைக்ரோசாஃப்ட் சர்வர் நேற்று திடீரென முடங்கியதால் உலகம் முழுவதும் மைக்ரோசாஃப்ட் சேவைகளை பயன்படுத்தி வரும் பல்லாயிரக்கணக்கான நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில் மைக்ரோசாஃப்ட் சர்வர் முடங்கியதற்கு ரஷிய ஆதரவு பெற்ற 'நொபிலியம்' என்ற குழு அமெரிக்காவின் டிஜிட்டல் கட்டமைப்புகளைக் குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்தி, அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்களைத் திருட முயற்சித்துள்ளது. 

அப்போது மைக்ரோசாஃப்ட்டின் மென்பொருட்களில் வைரஸ்களை செலுத்தி தாக்குதல் நடத்தப்பட்டது என்றும், அந்த முயற்சி முறியடிக்கப் பட்டது என்பதையும் மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் உறுதி செய்தது. இதையடுத்து நேற்று ஏற்பட்ட இந்த சர்வர் முடக்கத்திற்கு ரஷியாவின் சைபர் தாக்குதல் தான் காரணமா என்ற சந்தேகம் உலகெங்கிலும் எழுந்துள்ளது. 

ஆனால் கிரவுட்ஸ்ட்ரைக் நிறுவனம் இது சைபர் தாக்குதல் அல்ல என்றும், மென்பொருளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு தான் இதற்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளது. ஆயினும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் பலரும் இது சைபர் தாக்குதல் தான் என்று உறுதியாக கூறி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Does Russia Cyber Attack Causes the Microsoft Outage


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->