பேருந்து நிலையமா இது.?! ஏர்ப்போட்டை மிஞ்சும் ஸ்மார்ட் வசதிகள்.! எங்குள்ளது தெரியுமா.?!  - Seithipunal
Seithipunal


இந்தியாவின் ஐடி தலைநகரமாக இருந்து வருவது பெங்களூர். அமெரிக்காவின் சிலிக்கான் வேலி நகருக்கு இணையாக  பெங்களூருவில் அதிக அளவிலான ஐடி கம்பெனிகள்  இருக்கின்றன. இதன் காரணமாகவே பெங்களூர் இந்தியாவின் சிலிக்கான் வேலி என அழைக்கப்படுகிறது.

தற்போது பெங்களூர் நகரில் சர்வதேச விமான நிலையத்திற்கு இணையாக ஹைடெக் வசதிகளுடன் பேருந்து நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. பெங்களூர் நகரில் அமைந்திருக்கும் இன்ஃபோசிஸ் அவன்யூவிற்கு எதிராக அமைந்துள்ள பெங்களூர் விமான நிலைய பேருந்து நிறுத்தம் தான்  ஹைடெக் பேருந்து நிலையமாக மாற்றப்பட்டு இருக்கிறது.

சகல ஹைடெக் வசதிகளுடனும் அமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்தில் செல்போன் சார்ஜ் செய்யும் வசதி, லேப்டாப் சார்ஜ் செய்யும் வசதி, தானியங்கி சானிட்டரி நாப்கின் விற்பனை செய்யும் இயந்திரம், ஸ்மார்ட் டஸ்ட் பின்,  ஆட்டோமேட்டிக் ஸ்நாக்ஸ் செல்லர் மெஷின் போன்ற நவீன வசதிகளுடன் சர்வதேச விமான நிலையங்களுக்கு இணையாக இந்த பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் எந்தப் பகுதியிலும் இதுபோன்ற சகல வசதிகளுடனும் கூடிய ஸ்மார்ட் பேருந்து நிலையத்தை காண முடியாது. எலக்ட்ரானிக்ஸ் சிட்டி இண்டஸ்ட்ரியல் டவுன்ஷிப் அத்தாரட்டியின் கீழ் இந்தப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பேருந்து நிலையத்தை பி எம் டி சி நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் சத்யாவதி மற்றும்  ஸ்பெஷல் கமிஷனர் ஆப் போலீஸ் அண்ட் டிராபிக் டிவிஷன் எம் ஏ சலீம் ஆகியோர் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்து வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

india first multi facility  smart bus stand opened in bengaluru


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->