காசாவின் முக்கிய பகுதியில் இருந்து படைகள் வாபஸ்...இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


வடக்கு காசாவையும் தெற்கு காசாவையும் இணைக்கும் நெட்சரிம் பகுதியில் இருந்து படைகள் வாபஸ் பெறப்பட்டது என இஸ்ரேல் ராணுவ அதிகாரி தெரிவித்தார்.

கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாகப் பிடித்துச்சென்றனர்.இதையடுத்து இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் 15 மாதத்துக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது. 

அதனை தொடர்ந்து நடைபெற்ற தற்காலிக போர் நிறுத்தத்தின்போது 120-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். மேலும் ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 94 பிணைக்கைதிகள் உள்ளனர். மேலும் அதில் 34 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஹமாஸ் போராளிகள் பிணைக்கைதிகளை விடுவித்து வருகின்றனர்.அந்தவகையில்  இஸ்ரேல் ராணுவமும் தங்கள் சிறைகளில் உள்ள பாலஸ்தீனர்களை விடுவித்து வருகிறது.

இந்தநிலையில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியபோது வடக்கு காசாவில் இருந்த பாலஸ்தீனர்கள் தெற்கு காசாவிற்கு இடம்பெயர்ந்தனர். தற்போது அவர்கள் மீண்டும் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்புவதற்கு இஸ்ரேல் ராணுவம் அனுமதித்தது. இதையடுத்து அதன்படி ஏராளமான பாலஸ்தீனர்கள் வடக்கு காசாவுக்கு திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில், வடக்கு காசாவையும் தெற்கு காசாவையும் இணைக்கும் நெட்சரிம் பகுதியில் இருந்து படைகள் வாபஸ் பெறப்பட்டது என இஸ்ரேல் ராணுவ அதிகாரி தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Withdrawal of troops from mainland Gaza Israeli Army Announces!


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->