ஐபோன்களுக்கு அதிகமாகும் சலுகைகள்.! டீசர் வெளியிட்டு அசத்தும் பிளிப்கார்ட்.! - Seithipunal
Seithipunal


ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 சீரிஸ், ஐபோன் 12 மினி மற்றும் ஐபோன் 11 சீரிஸ் மாடல்களுக்கு பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2022 விற்பனையில் சிறப்பு சலுகைகளை வழங்க உள்ளது.

இதில் ப்ளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு சலுகை விற்பனை செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 30ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த சிறப்பு விற்பனையில் லேப்டாப், ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.

இதில் ஐபோன் மாடல்களுக்கு ப்ளிப்கார்ட் வழங்க இருக்கும் சலுகை விவரங்களை டீசர்களாக தனது வலைதளத்தில் வெளியிட்டு உள்ளது. மேலும் வலைதளம் மட்டுமின்றி, ஸ்மார்ட்போன் செயலியிலும் ஐபோன்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் டீசர்களாக வெளியிடப்பட்டுள்ளது.

டீசர்களின் படி ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2022 சிறப்பு விற்பனையில்,

ஐபோன் 13 மாடல் விலை ரூ. 49,990ல் துவங்கும் என்றும், ஐபோன் 13 ப்ரோ மாடலின் விலை ரூ. 89,990 என்றும், ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை ரூ. 99,990ல் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐபோன் 12 மினி விலை ரூ. 39,990 அல்லது குறைவாக கிடைக்கும் என்றும், ஐபோன் 11 மாடல் விலை ரூ. 29,990-க்கு கிடைக்கும் என்றும், ஐபோன் 12 மினி மாடலின் விலை ரூ. 55,359 என்றும், ஐபோன் 11 விலை ரூ. 43,990 என்று ப்ளிப்கார்ட் டீசர்களில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

iPhone Flipkart big billion 2022 sale price


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->